உடற்பயிற்சி நிலையங்கள் திங்களன்று திறக்கப்படலாம் என்று நோர்வேயின் பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg ) இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி மையங்களுக்குள் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பது எப்போதுமே சாத்தியமாக இருக்க வேண்டும்.
ஆனால், கடினமான உடல் செயல்பாடு கொண்ட கூட்டுப் பயிற்சிகள் மூச்சு வெளியேற்றத்தை அதிகரித்து அதனால் மூச்சுத்திணறல் மற்றும் துளிமூலமான தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
கூட்டுப் பயிற்சிகளில், பங்கேற்பாளர்களிடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், அடிக்கடி பயன்படுத்தப்படும்/ தொடும் இடங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வழிமுறை (hygiene) இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.