இன்று நோர்வேயில் ஒசுலோ மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் பிற்பகல் 3 மணிக்கு தமிழின அழிப்புநாள் நினைவுகள் ஆரம்பமாகியது இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், நோர்வே தொழிலாளர் கட்சியின் நினைவுரை, நோர்வே சோலிச இடது சாரிக்கட்சியின் நினைவுரை, தமிழ் இளையோர் அமைப்பின் நினைவுரை, தமிழ் மகளீர் அமைப்பின் நினைவுரை, அனைத்துலக இளையோர் அமைப்பின் நினைவுரை, என்பன இடம்பெற்றிருந்தன
இம்முறை நிகழ்வில் வழமைக்கு மாறாக வேற்றின மக்கள் பலர் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயின் ஸ்தவங்கர் நகரத்திலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் தமிழின அழிப்பு நாள் நினைவுகூரப்பட்டுள்ளது,தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிற இனத்தவர் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.