FHI இன் தினசரி அறிக்கையில், கடந்த மே 29 வெள்ளிக்கிழமைக்கு பின்னதாக நோர்வேயில் ஒரு புதிய கொரோனா மரணம் பதிவாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் 60 முதல் 69 வரையிலான வயது வட்டத்துக்குள் உள்ளவர் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. மேலும், நோர்வேயில் கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை மொத்தம் 237 பேர் இறந்துள்ளனர்.
VG யின் கணக்கெடுப்பின்படி:
- இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 29 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது மூவர் கூடுதலாகும். இன்றைய நாள் நிறைவில் இந்த எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்!
- அதேபோல், அவசர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 9 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 8 ஆகவே இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இது ஒருவர் கூடுதலாகும்.
- மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 3 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினமும் 3 ஆகவே இருந்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இதில் மாற்றங்கள் எதுவுமில்லை.
- மேலும், நோர்வேயில் இன்று இதுவரை புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்படடவர்கள் எண்ணிக்கை தற்போழுது 8446 ஆக உயர்ந்துள்ளது.
- இன்றைய (02.06) புள்ளிவிபரங்களின்படி, நோர்வேயில் இதுவரை 250,968 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.