நோர்வேயில் புதிய பள்ளி வாழ்க்கை எப்படி அமையப்போகின்றது!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் புதிய பள்ளி வாழ்க்கை எப்படி  அமையப்போகின்றது!

பெந்தெகொஸ்தே (Pinse) பண்டிகை நாளின் பின்னர் பாடசாலைகள் முன்னர் போன்று செயல்படும் என்று அறிவு மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் Guri Melby (V) மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஜூன் 2, செவ்வாய்க்கிழமை முதல், மழலையர் பள்ளி குழந்தைகள் மற்றும் அனைத்து பள்ளி மட்டங்களிலும் உள்ள மாணவர்கள் கோடைகால விடுமுறையை நோக்கி, எவ்வித தேர்வு அழுத்தமுமின்றி வழமையான வழியில் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று அரசாங்க செய்தியாளர் கூட்டத்தில், அமைச்சர் Guri Melby (V) பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் மாற்றங்களை அறிவித்திருந்தார்.

அடுத்த வாரம் முதல், கொரோனா மண்டலம் சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது கிட்டத்தட்ட சாதாரண பள்ளி வாழ்க்கை என்று பொருள்படும். இருப்பினும், தொடர்ந்தும் கவனிக்கவேண்டியவை என்னவென்றால், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருக்க வேண்டும், மேலும் கை சுகாதாரத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மஞ்சள் மட்டத்தில் சரிசெய்யப்படுவது மாணவர்களிடையே உள்ள தொடர்புகளின் அளவுகளாகும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சிவப்பு மண்டலம் என்பது இன்றைய தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும். மேலும், மஞ்சள் மண்டலம் என்பது பல சிவப்பு மண்டல நடவடிக்கைகளில் தளர்வு என்று பொருள்படும், பச்சை மண்டலம் என்பது சாதாரண, வழமையான செயல்பாடுகளை குறிக்கும்.

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளை விடுவதை தவிர்த்தல் அவசியம்!

மஞ்சள் மண்டல மாற்றம் மற்றும் ஒரு மீட்டர் இடைவெளி விதி முறையின் தளர்வு என்பதானது, பள்ளி குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளி குழந்தைகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பு இருந்தது போன்ற உடல் ரீதியான தொடர்பில் இருக்கலாம் என்று அர்த்தமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க நாங்கள் தொடர்ந்தும் பரிந்துரைக்கின்றோம். உதாரணமாக, எல்லோரும் ஒரே நேரத்தில் இடைவெளை நேரத்தை எடுத்துக்கொள்வது நல்லதல்ல, மேலும் நீங்கள் வெளிப்புற பகுதியை சிறிது சிறிதாக பிரித்து வைத்து பயன்படுத்தலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே நுழைவாயிலை பயன்படுத்தக்கூடாது.

நீங்கள் வழமையான வகுப்பு அளவுகளுக்கு திரும்பியிருந்தாலும், வெவ்வேறு நுழைவாயில்களை பயன்படுத்துவது மற்றும் வெவ்வேறு நேரங்களில் தொடங்குவது புத்திசாலித்தனமாக இருக்கலாம் என்று அமைச்சர் Guri Melby (V) மேலும் கூறியுள்ளார்

பகிர்ந்துகொள்ள