நோர்வேயில் “பெப்.4 – கரிநாள்”!

You are currently viewing நோர்வேயில் “பெப்.4 – கரிநாள்”!

நோர்வே தலைநகர் “ஒஸ்லோ”வில், இலங்கையின் சுதந்திரநாள், தமிழர்களின் கரிநாளாக அடையாளப்படுத்தப்பட்டது. 1948 பெப்.4 இல் பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுபட்டு, சுதந்திரநாடாக பிரகடனம் செய்யப்பட்டு இவ்வருடம் 75 ஆவது வருடம் நிறைவு காண்கிறபோதும், இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழ்மக்கள்மீது சிங்கள இனவாத அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடக்குமுறைகள், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கள் காரணமாக, தமிழ்மக்கள் இந்நாளை கரிநாளாக தொடர்ந்தும் அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழர்கள் இந்நாளை இன்றும் கரிநாளாக அடையாளப்படுத்தியிருந்ததோடு, தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் தேசங்களிலும் கரிநாள் அடையாளப்படுத்தப்பட்டதற்கு அமைவாக, நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலும், நகர மத்தியில் அமைந்துள்ள நோர்வே நாடாளுமன்ற முன்றலில் உணர்வாளர்களால் கரிநாள் அடையாளப்படுத்தப்பட்டது.

இலங்கையில் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், இனவழிப்பு செய்யப்பட்டும் வருவதை சுட்டி நிற்கும் பதாதைகளை ஏந்தியிருந்த உணர்வாளர்கள், தமிழர்கள் சுயநிர்ணய உரிமைகளோடு வாழ்வதற்கான தனியான தமிழ்த்தேசமொன்றை அங்கீகரிக்கவேண்டும் என்ற கொட்டொலியையும் எழுப்பியிருந்தனர்.

நோர்வேயில்

 

நோர்வேயில்

நோர்வேயில்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply