நோர்வேயில் மலைவாழ் குடிசைகளுக்கு செல்ல தடை! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் மலைவாழ் குடிசைகளுக்கு செல்ல தடை! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயிலுள்ள மலைவாழ் குடிசைகளுக்கு மக்கள் செல்வதற்கு நோர்வே அரசு இன்று தடை விதித்துள்ளது.

“ஈஸ்டர்” தவக்காலம் உட்பட, பொது விடுமுறை நாட்களிலும், கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளில், இயற்கை சார் சூழலில் மலைகள், ஆறுகள், குளங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி மலைக்குடில்களில் சென்று தங்கி வருவது, நோர்வே மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன பிரதான விடயமாக இருந்துவரும் நிலையில், “கொரோனா” பரம்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அரசு இத்தடையுத்தரவை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது.

“கொரோனா” பரவலை கட்டுப்படுத்துமுகமாக மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி அரசு அறிவித்தல் விடுத்திருந்தாலும், பெருமளவிலான மக்கள், மலைவாழ் குடிசைகளுக்கு சென்று தங்கியிருந்தமை பெரும் விசனத்துக்கு உள்ளாகியிருந்தது. இதனால், மலைவாழ் குடிசைகளில் தங்கியிருப்பதை தடை செய்யவேண்டுமென சுகாதாரத்துறை அரசுக்கு பலமுறை வேண்டுகோள்களை விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள