ஒஸ்லோவில் உள்ள Ellingsrudhjemmet இல் வசித்துவரும் முதியவர் ஒருவர், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். நோர்வேயில் இது மூன்றாவது மரணமாகும்.
குறித்த நபர் இந்த வார தொடக்கத்தில் இறந்திருந்த போதிலும், ஒஸ்லோ நகராட்சி இப்போதுதான் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது என்று Sykehjemsetaten தெரிவித்துள்ளது.

அதே இடத்தில் சனிக்கிழமை மேலும் இரண்டு குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஐந்து குடியிருப்பாளர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதற்கான பதில்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது..
ஆதாரம்/ மேலதிக தகவல்: VG