கொரோனா வைரஸ் நோயால் நான்கு புதிய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்வே பொது சுகாதார நிறுவனம் (FHI) இன்று ஞாயிறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
நோர்வேயில் மொத்தம் 19 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் எவரும் மோசமாக பாதிக்கப்படவில்லை என்றும் FHI செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
ஒஸ்லோவில் உள்ள ‘Etterstad videregående skole’ ஆசிரியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிமுதல்வர் Elin Stavrum உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல் பெர்கனில்(Bergen) DNB பணியாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.