யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி யின் 34ம் ஆண்டு வணக்க நிகழ்வு நோர்வே தமிழ் மகளீர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடனங்கள் பாடல்கள் கவிதைகள் என விடுதலை வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்ததோடு மாவீரின் இலக்கை வெல்ல நாம் தொடர்ந்து பணியாற்றவேண்டுமென்ற உறுதிப்பாட்டை விதைத்தன




