நோர்வேவாழ் தமிழரின் அடையாளம், அறிவு. அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம்.

You are currently viewing நோர்வேவாழ் தமிழரின் அடையாளம், அறிவு.  அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம்.
நோர்வேவாழ் தமிழரின் அடையாளம், அறிவு. அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம்.
ஈழத்தமிழரின் புலம் பெயர்வாழ்வில் உருவாக்கபட்ட தமிழ்க் கல்வி நிறுவனங்களில் முதனமையானதும். நோர்வேவாழ் தமிழரின் அடையாளம், அறிவுமானது. அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம்.
2009 இல் ஈழவிடுதலைப் போராட்டம், ஆயுதவழியில் இனப்படுகொலை யூடாக அழிக்கப்பட்டபோது மூண்ட தீ, தமிழர் வாழ்விடமெங்கும் பரவிய தீயின் புகை மூட்டம் கலையும் முன்னம்.
நோர்வேயில் 2009 – 2010 இல் தமிழர் வள ஆலோசனை மையத்தின் (TRVS) நிர்வாக உறுப்பினர்கள், இந்த நிறுவனம் கடந்த காலத்தில் இயங்கியது போல, இனி இந் நிறுவனத்தை உருவாக்கிய அமைப்புடன் மரபு ரீதியான உறவைப் பேணும் பண்பாட்டை மதித்து இயங்க முடியாது. அப்படியான தேவையும் இனி இல்லை எனக் கூறியதன் ஊடாக உருவாகிய பிணக்கு, இந்த நிறுவனம் இன்று எதிர்கொண்டிருக்கும் தனி நபர், குழுவின் ஆக்கிரமிப்புக்கான அடிப்படையை உருவாக்கியது என்பதை அறிக.
உருவாகிய பிணக்குத் தீர்ப்பதற்காக, ஒரு சமூக ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அக்குழு இந் நிறுவனம் தொடர்பான தனது வரலாற்று அறிதல் புரிதலின் அடிப்படையில் நிறுவனத்தின் தோற்றுவாய்க்கு உரிய இடம், வழங்காது மதிப்பளிக்காது. ஒரு யாப்பு எழுதியது.
எழுதப்பட்ட யாப்பு, முறன் பட்ட இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கையொப்பமிட்டு பதிவுக்கும் அனுப்பப்பட்டதாக அறியமுடிகிறது,
தமிழர் வள ஆலோசனை மையம் ஒரு “அறக்கட்டளை அமைப்பு”, இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தவர்கள் என்ற அடிப்படையில், இந்த யாப்பு மாற்றம் தொடர்பாக அறக்கட்டளையை உருவாக்கியவர்களுக்கு கருத்து ஏதும் இருக்கா என பதிவுத்திணைக்களம் கருத்துக்கேட்டபோது, எழுதப்பட்ட யாப்பில் தமக்கு மாறுபட்ட கருத்து இருக்கென TRVS அறக்கட்டளை அமைப்பை அ. பூ. த. க. கூடத்திற்காக. உருவாக்கிய ஆரம்பகால உறுப்பினர்கள் ஏழு பேரில் நால்வர் கருத்துத் தெரிவித்தனர். பின்பு அமைதியாகினர். ஒதுங்கிக்கொண்டனர்.
ஏழுபேரில் நானும் ஒருவன், இக்காலப்பகுதியில் பிரித்தானியாவில் வாழ்ந்தேன். TCC செயற்பாட்டாளன். அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட ஆரம்ப நாளில் இருந்து உதவி நிர்வாகியாகச் செயற்பட ஆரம்பித்து, 1995 இல் நிர்வாக உறுப்பினராகி 1997 கடைசிவரை செயற்பட்டேன். TRVS கடிதத் தலைப்பு அமைப்பு 10.04.1996 பதிவு செய்ததில் இருந்து 2002 ஆம் ஆண்டு ஒரு சில மாதம் வரை உறுப்பினராக இருந்தேன்.
1992 இல் அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம்.
ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தை இயக்குவதற்கு ஒரு நிர்வாகக் குழு இருந்தது என்பதையும் அறிக.
நிர்வாகக் குழு புலம் பெயர்தேசத்தில் அன்னை பூபதி தமிழ்கலைக்கூடத்தை. ஒரு தனித்துவமான தமிழ்த் தேசியக் கல்வி நிறுவனமாக வளர்த்தெடுப்பதற்கான அனைத்து துறைசார் அடித்தளங்களையும் இடுவதற்காகச் சிந்தித்தது, திட்டங்களை உருவாக்கியது, செயற்படுத்தியது, முன்னகர்ந்தது என்பதையும் அறிக.
1. கற்பித்தல் உபகரணத்தயாரிப்பு பிரிவு.
2. தமிழ்க் கல்விக்கான பாடத்திட்டம், பாடப்புத்தகம்.
3. உதவிப் பாடத்திட்டம்.
4. கட்டடம் வாங்குவதற்கான முடிவும் முன்னகர்வும்.
5. பண்பட்ட நிர்வாக அடித்தளம்.
கட்டடம் வாங்குவதற்கான முயற்சி 1995 – 1996 இல் அதாவது 10.04.1996 இல் T R V S பதிவு செய்வதற்கு முன்பே தொடங்கிவிட்டது. அ. பூ. த. க. கூட நிர்வாக உறுப்பினர் உதவிப்பாடப் பொறுப்பாளர், அகிலன் சரவணமுத்து கட்டடம் வாங்குவதற்கான செயற்திட்டப் பொறுப்பாளராகச் செயற்பட்டார்.
00. 02. 1997 காலப்பகுதியில் கட்டடம் வாங்குவதற்கான பொறுப்பு உதவிப்பாடச் செயற்பாட்டாளர் காசிநாதன் நிர்மலநாதன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய பொறுப்பளர், பெற்றோர் குழு அமைத்து செயற்திட்டத்தை விரைவாகச் செய்து முடித்தார் என்பதையும் அறிக.
ஒரு தேசிய நிறுவனத்தின் வளர்ச்சிப்பாதையில். திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெறும்போது தேவைகள் உருவாகும்.
புதிய செயற்பாட்டாளர், செயல் வீரர்கள் இணைந்து சேவை செய்வதற்கும் முன்வருவர், புதியவர்களின் வரவுக்கான வழியை 1997 வரையான அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட நிர்வாகக் குழு திறந்தே வைத்திருந்தது வரவேற்றது என்பதையும் .அறிக.
1992 இல் இருந்து 1996 முடிவுக்குள், ஐந்து ஆண்டுகளில் கட்டடம் வாங்குவதற்கான நிர்வாகத்தின் நிதிச் சேகரிப்பாக 1,60000 kr நிதி கையிருப்பாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு முதல் தடவையாக Grorud Bydel இல் இருந்து 5000 – 6000 kr இற்கு இடைப்பட்ட தொகை நிதி உதவியாக கிடைத்தது.
இன்று இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் வெளியில் இருந்து நிதி உதவி கிடைப்பதாக அறிய முடிகிறது. ஆனால் எமது கட்டடத்திற்கு நான்கு மில்லியன் கடன் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அன்னை தலைமை நிர்வாகம் செல்வச் செளிப்பில் மிதக்கின்றது. தனது சனநாயக சர்வாதிகாரத்தைத் தக்க வைக்க விலை உயர்ந்த வழக்காடு அறிஞர்களை வேலைக்கு அமர்த்தி ஊதியம் வழங்கிவருகிறது என்பதையும் அறிக.
தமிழர் வள ஆலோசனை மையம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இயங்கி அன்னையிடம் மடிப்பிச்சை கேட்கும் நிலையில், அன்னையிடம் தனது இறையான்மையை இழந்து செயற்பட்டு வருகிறது என்பதையும் அறிக.
இன அழிப்புக்கு உற்பட்டு விடுதலைக்குப் போராடும் இனம் நாம், எமது மொழி, வரலாறு, பண்பாடு, கலை, மெய்யியல் என அனைத்துத் துறைகளையும் பாதுகாக்கவேண்டும், அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கவேண்டும் எனத்திட்டமிட்டுச் செயற்படும், அறிதலும் புரிதலும் உடைய, அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட நிர்வாகப் குழு அன்றுஇயங்கியது என்பதையும் அறிக.
நிறுவனத்தின் வரலாற்று வழித்தடத்தில் மாறிவரும் காலச் சூழலில் நிறுவனங்களின் நிர்வாகப் பண்பாடும், உறுப்பினர்களின் அரசியல் அறிதல் புரிதலுக்கு ஏற்ப செயற்திட்டங்களும், நிதிப்பாவனையும் அமையும்.
ஆரம்பகால நிர்வாக உறுப்பினர் நிறுவனத்தின் தோற்றுவாய்க்கு மதிப்பளித்து தமது அறிதல், புரிதல் அறவழிச் செயற்பாடுகள் ஊடாக, மிக மிக சிக்கனமான பண்பாட்டு நிர்வாகச் சூழலைக் கட்டிவளர்த்து, பெற்றோர், மக்கள் இடையே நன்மதிப்பைப் பெற்றனர்.
செயற்பாடுகள் ஊடாக எமக்கான கட்டடம் வாங்க முடியும் என்றும், வாங்கிய கட்டடத்தைப் பராமரிக்க முடியும் என்ற நிலையையும் எட்டினர். பெற்றோர், பொதுமக்கள் நிதிப் பங்களிப்பும் செய்தனர்.
2009 – 2010 இல் “அறியாமைப் புகை மூட்டத்தில்” இருட்டைப பார்த்துப் பயந்து, பாதுகாக்கின்றோம் எனப் பதறி அடித்து, எடுக்கப்பட்ட முயற்சியில் கலகம் உருவாகியது, இந்தக் கல்வி நிறுவனத்துள் கலகம் உருவாகி இருக்கவேண்டிய தேவையில்லை.
எல்லாத்தரப்பாலும் உருவாக்கப்பட்ட கலவரத்தால் ஒரு தேசிய பாதுகாவலர் உருவாக்கப்பட்டுள்ளார், அவருக்கு சாமரம் வீசுபவர்களும், ஒத்து ஊதும் ஓதுவார்களும் உருவாகிவிட்டனர்.
இன்றும் ஒரு நி்வாக மாற்றம் வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை எப்படிக் கலவரமாக்கப்படுகிறது என்பதையும் அனைவரும் அறிக.
யாப்பு சனநாயகம் எனக் கூறுபவர்கள் ஒரு தனிமனிதர் மீது இத்தனை குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதற்குரிய ஓட்டைகள் யாப்பில் இருக்கின்றது என்பதையும் அறிக.
அன்னை தலைமை நிர்வாகக் கட்டமைப்பு வெளியில் இருந்து நிதி உதவி எடுப்பதற்கான முதன்மை அடிப்படைகளைக் கொண்டதாக உள்ளது, கணக்குக் காட்டவும் கை எழுத்து போடுவதற்கும் இளையவர்கள் பாவிக்கப்பபடும் துர்ப்பாக்கிய நிலையும், நிலவுகிறது என்பதையும்அறிக.
2009 – 2010 இல் இந்த நிறுவனம் கடந்த காலத்தில் இயங்கியது போல, இனி இந் நிறுவனத்தை உருவாக்கிய அமைப்புடன் மரபு ரீதியான உறவைப் பேணும் பண்பாட்டை மதித்து இயங்க முடியாது. அப்படியான தேவையும் இனி இல்லை எனக் கூறியது தவறு எனப் போர்க்கொடி தூக்கியவரின் நிர்வாகத்தில், இன்று மரபு என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறையான்மையுள்ள நிறுவனமாக இயங்கிய கல்வி நிறுவனங்கள், இனியும் இறையான்மையுடன் இயங்கும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் இன நலனுக்காக செயற்படுத்த வேண்டிய செயற்திட்டங்கள் பல உண்டு. நிதி வரவு மேலதிகாமாக இருகுமேயானால் தமிழ்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழி வளர்ச்சி, பாதுகாப்பு, வரலாறு, மரபுரிமை பாதுகாத்தல் என பலத துறைசார்ந்தும் திட்டங்களை உருவாக்கி செயறபடலாம்.
இந்த நிறுவனங்களை கையகப்படுத்த X வருகிறது Y வருகிறது எனக் கதைகூறுவது உங்கள் ஆக்கிரமிப்புக் காலத்தை நீட்டுவதாகவே தெரிகின்றது
அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம். ஒரு கல்வி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது..
தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்கும் நிறுவனமாக வளர்த்தெடுக்கவேண்டும் என்ற பெரும் கனவுடன் பயணித்தவர்கள் நாம்.
இன்று இந்த நிறுவனங்கள், இச் சொந்தக் கட்டடத்துள் ஒரு நூலகம் இயங்கவேண்டும் என்ற அடிப்படை சிந்தனையும், பொறுப்பும் அற்ற நிர்வாகளிடம் சிக்கி உள்ளது என்பதையும் அறிக.
நன்றி
இ. குமரேந்திரன்
தமிழ்முரசம் வானொலி எப்போதும் தமிழ்த்தேசிய அமைப்புகளை பாதுகாக்கும் அதேவேளை தனிமனித அத்துமீறல்களை எதிர்க்கும் ஒருபோதும் அநியாயத்தின் பக்கம் துணை நிற்காது. இன்றைய அவல நிலை தனிமனித ஆசைகளால் தமிழ்த்தேசிய அமைப்புகள் சிறுமைப்படுத்தப்படுகிறது இத்துன்பத்திலிருந்து மீள, தமிழ்த்தேசிய அமைப்புகளை பலப்படுத்தவேண்டுமே தவிர தனிமனிதத்தவறுகளுக்கு துணைநிற்கக்கூடாது அப்படி நிற்பவர்களும் வரலாற்றுத்தவறை இழைக்கின்றார்கள் என்றே பொருள்ப்படும்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply