நோர்வே அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்களின் பெற்றோர்கள் நிர்வாகங்களுக்குள் நடைபெறும் சனநாயகத்திற்கு விரோதமான போக்கிற்கு எதிராகவும், நிர்வாகச்சீர்கேட்டுக்கு எதிராகவும், நீண்டகாலமாக பதவிகளை வகிக்கும் சிலரின் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும், கடந்த ஒருவருடகாலமாக போராடிவரும் நிலையில் பெற்றோரின் கருத்துக்களுக்கும் மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காது, அனைத்து வளாகங்களின் ஆண்டுக்கூட்டத்தில் மீண்டும் நிர்வாகங்களில் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக, தமக்கு சார்பான தேர்தல் குழுவை அமைத்து அவர்களுக்கூடாக தங்களின் ஆசைகளை அரங்கேற்ற துணிந்துள்ளனர்.
15 வருடகாலங்களாக பதவிகளை வகித்து சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் முட்டுக்கட்டைகளாக இயங்கி வருபவர்களை மீண்டும் அதிகாரத்தில் இருத்துவதற்கான சூழ்சிகளை அறிந்து பெற்றோர்கள் இன்று கனயீர்ப்பு அடையாளப்போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.
இப்போராட்டமானது இன்று(26.10.24) றொம்மன் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட முன்றலில் நடைபெற்றிருந்தது இப்போராட்டம் நடைபெறப்போவதை அறிந்து றொம்மன் அன்னைபூபதி கலைக்கூட வளாகத்தில் நடைபெற இருந்த 17 வளாகங்களுக்கான தேசிய ஆண்டுக்கூட்டத்தினை அவசர அவசரமாக மாற்றி கூட்டத்தினை இணையவழியில் மாற்றி தங்கள் விருப்பங்களை எந்தவித இடையூறும் இன்றி நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் அன்னை தலைமை நிர்வாகியாலும் அவருக்கு முண்டு கொடுக்கும் சக்திகளாலும் அநியாயத்தை நோக்கி நகரமுடியாது என்பதை அடையாளப்படுத்தும் போராட்டங்கள் தொடரும் என்றும், அவர்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தாது அகலும் வரை அறப்போராட்டம் பாரிய அழுத்தங்களை அவர்களுக்கு எனி வரும் காலங்களில் ஏற்படுத்தவேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கெடுத்த பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று
மக்கள் எமது எதிர்கால சந்ததிகளின் தமிழ்மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு இன்று எங்களின் பிள்ளைகள் மொழியை கற்றால் போதும் என்ற மனச்சிறையில் இருந்து விடுபடுவது காலத்தின் கட்டாயம் என்ற காத்திரமான கருத்துக்களை பெற்றோர்கள் தெரிவிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.