இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகசந்திப்பில் , ஒஸ்லோ நகர சபை ஆலோசகர் ரேமண்ட் ஜோகன்சன் அதிகமான கொரோனா தொற்றுக்காரணமாக தலைநகரில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
நோர்வேயில் ஏற்பட்டிருக்கும் அதிகமான கொரோனா இடரினை தடுப்பதற்காக உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளளார்.
அத்தோடு
அனைத்து உட்புற நிகழ்வுகளையும் தடை செய்வதாகவும் தெரிவித்துள்ளதோடு
பெரியவர்கள் சிறியவர்களின் விளையாட்டுக்களை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு
சிறுவர்கள் இளைஞர்களுக்கான அனைத்து போட்டிகளையும் இடைநிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக சந்திப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு வாய்கவசத்தினை அணியவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.