நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது!

  • Post author:
You are currently viewing நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸின்  இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது!

நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸின் (Märtha Louises) இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் ஒன்று முடக்கப்பட்டுள்ளது. அது ஊடுருவி செயலிழக்கப்பட்டுள்ளதாக அவரது செயலாளர் Carina Scheele Carlsen கூறியுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு எப்போது மீண்டும் செயல்படும் என்பது தெரியாது என்றும், அதை சரிசெய்ய முயற்சி செய்யப்படுகின்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Minneapolis இல் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு இறந்த George Floyd பற்றி கடந்த வாரம் எழுதிய இளவரசியின் Iam_marthalouise என்ற இன்ஸ்டாகிராம் கணக்கே முடக்கப்பட்டுள்ளது.

«George Floyds life mattered».”George பிலோய்டின் வாழ்க்கை முக்கியமானது” என்ற சுவரொட்டியை வைத்திருந்த ஒரு எதிர்ப்பாளரின் புகைப்படத்தை இளவரசி வெளியிட்டிருந்தார்.

“நிறுத்து !! அப்பாவி ஆண்கள் மற்றும் பெண்கள் கொலையை! ; இது நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று இளவரசி கடந்த வியாழன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

“ஒரு மனித இனமாக நாம் ஒருவரையொருவர் கொல்வதிலிருந்தும், ஒருவரையொருவர் கீழே தள்ளுவதிலிருந்தும், நம்முடைய சொந்த பாதுகாப்பின்மை காரணமாக ஒருவரையொருவர் காயப்படுத்துவதிலிருந்தும் நாம் முன்னேறவில்லை என்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று இளவரசி மேலும் பதிவிட்டிருந்தார்.

மக்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து, நேசிக்கும் ஒரு உலகத்தில் தான் எழுந்திருக்க விரும்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

“இதை செய்வதற்காகவே நாம் இந்த பூமியில் வாழ்கின்றோம் ” என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

மேலதிக தகவல்: TV2

பகிர்ந்துகொள்ள