


நோர்வே தமிழ் இளையோர் அமைப்பால் தியாகதீபம் திலீபனின் 33 வது நினைவு நாளை நினைவு கூர்ந்து அன்னைபூபதி பாடசாலைக்கு அருகாமையில் அடையாள உண்ணாநிலைப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதோடு எமது போராட்டம் தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
தாயகத்தில் எமது மக்கள் சிறீலங்கா அரசால் அடக்குமுறையை எதிர்கொண்டு இருக்கின்ற நிலையில் எமது இளையவர்கள் இப்போராட்டத்தினை கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாக அங்கு கூடியிருக்கும் மக்களால் பேசப்படுவதை உணரக்கூடியதாக இருந்தது.