நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினரால் ஒசுலோவில் 23.03.25 ஞாயிற்றுக்கிழமை உளவியல் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது.
அகவணக்கத்துடன் 14:00 மணிக்கு மண்டபம் நிறைந்த பெண்களுடன் கருத்தரங்கு ஆரம்பமாகியது.
உள வைத்திய நிபுணர் திருமதி கலாஜினி சசிதரன் அவர்கள் தன்னை அறமுகம் செய்து கொண்டு பல உளவியல் கருத்துகளைக் கூறினார். ஏற்கனவே பெண்களால் எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், உடனடியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் காத்திரமான ஆலோசனைகளை வழங்கினார்.
அடுத்து திருமதி எழிலரசி சிறீபாலன் அவர்கள் LHL நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் உடற்பயிற்சி பற்றியும் அது பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் ௯றியதுடன் எவ்வாறு இணைந்து கொள்ளலாம், எங்கே எப்பொழுது நடக்கின்று என்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
நிறைவாக விஜி அகிலன் அவர்கள் தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பற்றியும் வைத்தியம் நடைபெற்ற போது ஏற்பட்ட உளவியல் ரீதியான தாக்கம் பற்றியும் தான் எப்படி அதிலிருந்து வெளியே வந்தார் என்ற கருத்துகளை வந்த பெண்களுக்கு ௯றினார். இவர் இது தொடர்பாகத் தமிழில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடப்பட்டது.
பங்கு பற்றியவர்கள் அனைவரும் கருத்தரங்கில் கதைக்கப்பட்ட விடயங்கள் யாவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இனி வரும் காலங்களில் இப்படியான கருத்தரங்குகளைத் தொடர்ந்து செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.
தமிழ் மகளிர் அமைப்பும் தொடர்ந்து இப்படியான கருத்தரங்குகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது.
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பு
23.03.2025