நோர்வே நாடாளுமன்ற அரசியலில் மீண்டும் “Terje Søviknes”!

You are currently viewing நோர்வே நாடாளுமன்ற அரசியலில் மீண்டும் “Terje Søviknes”!

“FrP” கட்சியின் உறுப்பினரான  “Terje Søviknes” மீண்டும் நோர்வே நாடாளுமன்ற அரசியலில் பிரவேசம் செய்துள்ளார்.

“FrP” கட்சியின் மிக முக்கியமான பிரமுகர்களின் ஒருவரான இவர், பல வருடங்களுக்கு முன்னர், உல்லாச விடுதியொன்றில், வயது குறைந்த பெண்ணோடு தங்கியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். குற்றத்தை ஒப்புக்கொண்ட “Terje Søviknes”, தீவிர அரசியலிலிருந்து சில வருடங்கள் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னதாக மீண்டும், உள்ளக அரசியலில் ஈடுபட்டு வந்திருந்தார்.

மூலப் பிரதி: vg.no

இந்த நிலையில், இன்று 18.12.2019 நடைபெற்ற அரசவை மாற்றத்தில், “Terje Søviknes” அமைச்சராக உள்வாங்கப்பட்டிருப்பதாக பிரதமர் “Erna Solberg” அம்மையார் அறிவித்துள்ளார். 

முதியவர்களுக்கான நல்வாழ்வு மற்றும் மக்கள் சுகாதார அமைச்சராக “Terje Søviknes” பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதுநாள் வரை அந்த அமைச்சகத்தை கவனித்து வந்த, “FrP” கட்சியின் பிரமுகர் “Sylvi Lysthaug” எண்ணெய்வள மற்றும் எரிசக்தி அமைச்சராக பொறுப்பில் அமர்த்தப்பட்டுளார்!

பகிர்ந்துகொள்ள