நோர்வே நாட்டில் விருந்தில் கலந்துகொண்ட 60 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்பு!

You are currently viewing நோர்வே நாட்டில் விருந்தில் கலந்துகொண்ட 60 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிப்பு!

நோர்வே நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நடந்த விருந்தில் கலந்துகொண்ட 60 பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த விருந்தில் கலந்துகொண்ட 120 விருந்தினர்களும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை சோதித்து உறுதி செய்து கொண்டவர்கள் மட்டுமின்றி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடந்த விருந்துக்கு பின்னர் கொரோனா அறிகுறிகள் தென்படவே, அந்த விருந்தில் கலந்துகொண்ட 50 பேர்களுக்கு PCR சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 10 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த 120 விருந்தினர்களில் ஒருவர் சமீபத்தின் தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது மூடிய அறையில் வைத்தே முதலில் நடந்துள்ளது. ஆனால் இரவு 10.30 மணிக்கு பின்னர், குறித்த உணவகத்தில் அனைவருடனும் இவர்கள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த 120 விருந்தினர்களுக்கு உணவு வழங்க உதவிய 10 ஹொட்டல் ஊழியர்களும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தியதில், அவர்களுக்கு பாதிப்பில்லை என்றே தெரியவந்துள்ளது.

நோர்வே மக்களில் 71 சதவீதம் பேர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் இது 69 சதவீதம் எனவும் அமெரிக்காவில் 59% எனவும் உள்ளது.

இந்த நிலையில், கானா, நைஜீரியா, பொஸ்வானா, சவுதி அரேபியா, தென் கொரியா மற்றும் இந்தியா வரிசையில் நோர்வே நாட்டிலும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply