நோர்வேயின் தமிழ்த் தேசியஅமைப்புக்கள் தாயகத்தில் கொரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வருகின்ற எமது மக்களுக்கு தொடர்ச்சியாக மனிதநேயப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் இன்று மனிதநேய உதவிகள் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் மணற்சேனை கிராம மக்களுக்கு நோர்வே மக்களின் நிதிப்பங்களிப்பில் அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 27 கிராமபிரிவுகளை கொண்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டாம் இணைப்பு
கொரனா தொற்று அச்சம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழிலை இழந்து உண்பதற்கு உணவின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு நோர்வே தமிழ் உறவுகளின் நிவாரணப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி இன்றைய நாள் பொத்துவில் மணற்சேனை கிராமத்தில் 50 குடும்பங்கள் , தீவுக்காளை எகட் வீட்டுத் திட்ட கிராமத்தில் 15 குடும்பங்கள், கோளவில் கிராமத்தில் 29 குடும்பங்களும், கண்ணகிபுரம் கிராமத்தில் 14 குடும்பங்களுக்கும் உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நோர்வே உறவுகள் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட 322 குடும்பங்களுக்கு தலா ரூபா 1,500/- பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.