நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 28.06.2022 அன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முகைதீன் பள்ளி பகுதிகளில் வாழும் 34 குடும்பங்களுக்கு தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமையுமெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கும் முஸ்லீம் சமூகத்தின் சார்பில் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
















