நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 14.08.2022 அன்று மாவைக் கலட்டி, தெல்லிப்பளை கிராம அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள், என்பன வழங்கிவைக்கப்பட்டன.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமையுமெனவும் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கு மாவைக் கலட்டி, தெல்லிப்பளை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.





நோர்வே வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் அம்பாறையில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு.
சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக நோர்வே நாட்டு மக்களின் நிதி பங்களிப்பில் தென் தமிழீழம் ,அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தும் முகமாக
16/08/2022ம் திகதி அன்று மணல்சேனை பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு பயிர் நாற்றுக்கள் மற்றும் பயிர் விதைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ்வுதவியை வழங்கிய நோர்வே வாழ் தமிழர்களுக்கு எமது கிராமத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்






