நோர்வே வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 18.08.2022 அன்று வட தமிழீழம் வடமராட்சி – பருத்தித்துறையின் தம்பசிட்டி மெதடிஸ்த மிஷன் பாடசாலை ,கந்தஉடையார் வீரகத்தி ச.ச நிலையம் ,தம்புறுவளை பிள்ளையார் கோவிலடி,அத்தியடிலேன் ,மாதனை ஆகிய இடங்களில் வழங்கப்பட்டன.தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாற்றுக்கள், மற்றும் பயிர்விதைகள், என்பன மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்த உதவித்திட்டம் பேருதவியாக அமையுமெனவும் இவ்வுதவியினை வழங்கிய நோர்வே வாழ்தமிழ் மக்களுக்கு வடமராட்சி மக்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.