பங்களாதேஷ்(Bangladesh) அரசாங்கம், நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒதுக்கீடுகளில் நியாயம் கோரி, கடந்த மாதம் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து, முதல் முறையாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
அத்துடன், இன்று திங்கள்கிழமை முதல் மூன்று நாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பங்களாதேஷில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர்.