திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 2.30 மணியளவில் திருகோணமலை – உவர்மலை லோவெர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் நடைபெற்றுள்ளது.
இந்நினைவேந்தல் நிகழ்வானது வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் குறித்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.
இதில் பெரும்பாலான வட கிழக்கு பகுதிகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)