ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வாராந்தம் படையினருக்கு சிறந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றார் எனவும், இதனால் படையினர் எந்த நேரமும் எதற்கும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் படைத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருக்கின்றார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புச் சபையை கூட்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் தொடர்பில் மிக விரிவான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்புக்களையும் உறுதிப்படுத்த இராணுவம் எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளது. பொதுமக்கள் தேவையற்ற அச்சங்களை கொள்ள வேண்டாம். – எனவும் படைத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவுக்குச் சென்ற போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பில் ஈடுபட்டவர் என்ற காரணத்தால் அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் அமெரிக்க அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்கத்கது.