“Kongsberg Gruppen” எனப்படும், நோர்வேயின் மிகப்பிரபலமான தொழிநுட்ப நிறுவனம், நோர்வேயிலுள்ள தனது பணியாளர்களை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் 11.000 பணியாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், நோர்வேயில் 400 பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளது. “கொரோனா” பரவலினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களினால், போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டும், தமது உற்பத்திகளுக்கான தேவைகளில் வீழ்ச்சி, விற்பனைக்கு பின்னதான சேவைகளின் கோரல்களில் வீழ்ச்சி போன்ற காரணங்களினால் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Kongsberg Gruppen ASA” என்ற இந்த நோர்வேயின் அரச நிறுவனமானது, கடல் அகழ்வு தொடர்பான தொழிநுட்பங்கள், பெட்ரோலிய மற்றும் எரிவாயு எடுப்பதற்கான தொழிநுட்பங்கள், வணிகரீதியிலான கடல் போக்குவரத்து தொடர்பான தொழிநுட்பங்கள், இராணுவ தொழிநுட்பங்கள், விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வுகளுக்கான தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான இன்றியமையாத தொழிநுட்பங்களை வழங்கிவருவதோடு, அவற்றுக்கான உபகரணங்களையும் தயாரித்து வழங்கிவருகிறது.