நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் மறுதேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், பிப்ரவரி தொடக்கத்தில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழன் அன்று நடந்த கட்சியின் வருடாந்திர காக்கஸ் கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று கூறினார்.
“நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், நியூசிலாந்தர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகள் இந்த ஆண்டு மற்றும் தேர்தல் வரை அரசாங்கத்தின் மையமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் நியூசிலாந்து தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று தான் இன்னும் நம்புவதாக ஆர்டெர்ன் கூறினார். இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார். அவரது பிரதம மந்திரி பதவிக்காலம் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் முடிவடையும்.
2017-ஆம் ஆண்டு 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆர்டெர்ன் உலகின் இளம் பெண் தலைவரானார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கிறைஸ்ட்சர்ச் மற்றும் ஒயிட் தீவில் உள்ள இரண்டு மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதல், எரிமலை வெடிப்பு உட்பட பெரும் பேரழிவுகள் காலத்தில் நியூசிலாந்தை வழிநடத்தியுள்ளார்.