சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வ தன்மை கூறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்
இதன்பின்னர் இன்று ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பிப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதேவேளை
சிறீலங்கா பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில், பதில் அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க உள்ளார்.