பதிலடி கொடூரமாகவும் துல்லியமாகவும் இருக்கும்: ஈரானுக்கு மிரட்டல் விடுத்த இஸ்ரேல்!

You are currently viewing பதிலடி கொடூரமாகவும் துல்லியமாகவும் இருக்கும்: ஈரானுக்கு மிரட்டல் விடுத்த இஸ்ரேல்!

ஈரான் மீதான தங்களின் தாக்குதல் கொடூரமானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவுடனான சந்திப்பை அடுத்து பேசிய அமைச்சர், கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலானது ஆக்ரோஷமானது ஆனால் துல்லியமற்றது என்றார்.

சுமார் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியிருந்தது. அதில் சுமார் 90 சதவிகிதம் இலக்கை அடைந்தது என்றே ஈரான் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், ஈரானுக்கு அளிக்கும் பதிலடியானது கொடூரமாகவும் துல்லியமாகவும் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் என அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதலில் விமானப்படைக்கு சேதம் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றை விமானம் கூட தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்றார். மட்டுமின்றி, ஒரு இஸ்ரேல் ராணுவ வீரரோ அல்லது பொது மக்களில் ஒருவரோ பாதிக்கப்படவில்லை என்றார்.

ஆனால் இஸ்ரேல் தொடுக்கும் பதிலடியானது கொடூரமாகவும் துல்லியமாகவும் இருக்கும் என்றார். அவர்கள் கண்டிப்பாக திணறப் போகிறார்கள் என அமைச்சர் Yoav Gallant தெரிவித்துள்ளார்.

உண்மையில் ஈரானின் இலக்கு இஸ்ரேல் பொதுமக்களோ அல்லது ராணுவ முகாமோ அல்ல என்றே அப்போது கூறப்பட்டது. காஸா மக்கள் மீது வெடிகுண்டு வீசும் அமெரிக்கா பரிசளித்த போர் விமானங்களை அழிப்பதே நோக்கமாக இருந்தது என தகவல் வெளியானது. அதை துல்லியமாக செய்து முடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments