பயங்கரவாதத்தை வேரறுப்போம்-துருக்கி அதிபர் !

You are currently viewing பயங்கரவாதத்தை வேரறுப்போம்-துருக்கி அதிபர் !

துருக்கி தலைநகர் அங்காராவில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் விமானப்படைக்கு சொந்தமான விமான உதிரிபாகங்கள், டிரோன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என துருக்கி சார்பில் கூறப்படுகிறது. மேலும் அதற்கு பதிலடியாக துருக்கியையொட்டி உள்ள எல்லை நாடுகளான சிரியா, ஈராக்கில் உள்ள குர்து இன முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் துருக்கியில் நடந்த ராணுவ நிகழ்ச்சியில் அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘நம் நாட்டிற்கு எதிராக நிலவும் பயங்கரவாதத்தையும், அச்சுறுத்தலையும் வேரறுப்போம்” என ராணுவ வீரர்களிடையே பேசினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply