பயங்கரவாதத் தடை திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மனு தாக்கல்!

You are currently viewing பயங்கரவாதத் தடை திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மனு தாக்கல்!

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 11ஆம் திகதி திருத்தச் சட்டமூலத்தை பராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

திருத்தச் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக உயர்நீதிமன்ற தீர்ப்பை வழங்குமாறு கோரியே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply