பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை குறித்து மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி!

You are currently viewing பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை குறித்து மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  குறித்து அரசாங்கத்தை கடுமையாக சாடுவதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவருகின்றன .

மேற்குலக நாடுகள் தங்கள் சட்டநிபுணர்களுடன் இந்த சட்ட மூலங்கள் குறித்து ஆராய்ந்ததில் இந்த சட்டமூலங்கள் பிரச்சினைக்குரியவை என அவை முடிவு செய்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாதத்திற்கான விளக்கம் பரந்துபட்டது சர்வதேச தராதரங்கள் மரபுகளை மீறுவது  என மேற்குலக நாடுகள் கருதுகின்றன இந்த சட்ட மூலம் குறித்து மேற்குலக நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் போல துஸ்பிரயோகங்கள் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் போன்றவை இடம்பெறுவதை ஊக்குவிக்ககூடிய பிரிவுகள் காணப்படுகின்றன என உயர்வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சமீபத்தைய தீர்மானத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேணடும் என்றவேண்டுகோள் காணப்படுகின்றது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை பெறுவதற்கு இலங்கை தகுதிபெறுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முன்னர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம் மேற்குலக நாடுகளின் விமர்சனத்தினால் அதனை மீளப்பெற்றுக்கொண்டது.

மேற்குலக நாடுகள் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டன. எனினும் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள சட்ட மூலம் குறித்தும் மேற்குலகநாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போது  விக்டோரியா நுலண்ட் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply