இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பதிலீடு செய்ய வேண்டும் அல்லது திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பெறுமதிகளை மதிப்பதற்கு மெய்யாகவே அர்ப்பணிப்புடன் இலங்கை செயற்படுமானால் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்த திருத்தங்களை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் ஜாசீம் போன்றவர்கள் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்கள் யதார்த்தமானவையா என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.