பயணக் கட்டுப்பாட்டில் குடும்ப வன்முறைகளில் அதிகளவு ஆண்கள் காயம்!

You are currently viewing பயணக் கட்டுப்பாட்டில் குடும்ப வன்முறைகளில் அதிகளவு ஆண்கள் காயம்!

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், வீடுகளுக்குள் இடம்பெறும் குடும்பத் தகராறு காரணமாக, 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்று கூறப்படுகிறது

அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 112 பேர் குடும்பத் தலைவர்கள் என்றும், 42 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீட்டு வன்முறைகளை அடுத்து, நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்றும், அவருடைய சடலம், ​கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply