சுவீடனில் புகழ்பெற்ற கப்பல் போக்குவரத்து நிறுவனமான “Stena Line” நிறுவனம், நோர்வே – டென்மார்க் ஆகிய நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் டென்மார்க்கின் “Fredrikshaven” நகரங்களுக்கிடையில் 1979 ஆமி ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 41 வருடங்களாக சேவையிலீடுபட்டு வந்த “Stena Saga” என்ற இந்தக்கப்பல் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் இப்போது ஏற்பட்டுள்ள “கொரோனா” பாதிப்பு நிலைமைகளால், பயணிகள் போக்குவரத்து ஏதும் இல்லாமல், மிகுந்த பொருளாதார இழப்பை சந்தித்திருக்கும் மேற்படி நிறுவனம், எதிர்வரும் கோடைகால விடுமுறையின்போதும் பயணிகளின் போக்குவரத்துக்கு உத்தரவாதமேதும் இல்லாததால், இந்த சேவையை நிரந்தரமாக நிறுத்துவதாகவும், நோர்வேயிலுள்ள தமது 30 பணியாளர்களுக்கும் வேலையிழப்புக்கான முன்னறிவித்தலை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.