ஐக்கிய அமீரக இராச்சியத்தின் (UAE) பொது விமான சேவை நிறுவனமான “எமிரேட்ஸ் / Emirates” நிறுவனம், தனது பயணிகளுக்கான சேவைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
“கொரோனா” பரவலால் உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமைகளையடுத்து, பல்வேறு உலக நாடுகளின் விமான போக்குவரத்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டோ அல்லது மட்டுப்படுத்தப்பட்டோ இருக்கும் நிலைமையில், மேற்படி “Emirates” நிறுவனமும் தனது பயணிகள் விமான சேவைகள் அனைத்தையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
எனினும், தமது சரக்கு விமான சேவைகள் வழமை போலவே தொடருமெனவும் மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.