பயத்தினாலேயே தேர்தலை சீர்குலைக்கிறது அரசாங்கம்!

You are currently viewing பயத்தினாலேயே தேர்தலை சீர்குலைக்கிறது அரசாங்கம்!

மக்களுக்கு பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசாங்கம் 24 மணிநேரமும் 365 நாட்களுமாக தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தினால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பது மக்கள் பயத்திற்கே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாகமக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி மக்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் கீழ், ஊடகங்களை அடக்கி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் போது அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை கூட மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள்மீறப்படுவதால், இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் இதற்கு எதிராக ஒன்றாகப் போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply