பரபரப்புச் செய்திகளை விட்டு ஊடகங்களைத் திருப்திபப்டுத்துவதல்ல முக்கியம்!

You are currently viewing பரபரப்புச் செய்திகளை விட்டு ஊடகங்களைத் திருப்திபப்டுத்துவதல்ல முக்கியம்!

நிர்ப்பந்தங்கள்,நெருக்கடிகள் மத்தியிலும், சோர்வுற்றுப்போகின்ற
நேரங்களிலும், நாம்
எடுக்கின்ற தீர்மானங்கள்
அனேகமான தவறுகளுக்கு
வாய்ப்பளித்துவிடும்.
இது,
பயிற்சியின் போது
எச்சரிக்கையோடு சொல்லித்தரப்படுகின்ற ஒரு பாடம்.

அவசரமா?.
நிதானமா?

யார் அவசரப்படுத்துவது?
யார் நிதானப்படுத்துவது?

தேசியத்தலைவர் கற்றுத் தரும் பாடம் ஒரு உதாரணம்.,..

அவரது வரலாற்று வழிகாட்டலை ,
வேண்டி விரும்புவோம். உளமார ஏற்று நடக்கிறோம்.

அன்றொரு நாளில் சிறிலங்கா
விமானப் படையினரை
ஏற்றிக்கொண்டு
பலாலியில் இருந்து புறப்படுகிறது அந்தவிமானம்.

மாலை நேரம்..
பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது,

புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வெடிச்சத்தம் கேட்கிறது,
அடிவிழுந்துவிட்டது,
ஆனால் விமானம் விழவில்லை.

குறிவைத்தவர்களுக்குத்
தெரியும்,வேருக்கும் புரியும்.

கோப்பாயின் வான்பரப்பில் புலிகளின் வான்காப்புப் படையணியிடம் ,அடிவாங்கிய விமானம்
தீப்பிழம்புகளை மெல்லக்
கக்குகிறது,
இடையிடையே வெடி ஒலி எழுப்பியபடி
புறப்பட்ட இடத்திற்கே
அவசரமாகத் திரும்புகிறது .

பல்லாயிரம் கண்கள்
ஏறெடுத்துப்பார்க்கும்
வண்ணம்
அதோ..
விழுது விழுது…
வீழாதா வீழாதா..

உடனடித் தகவல் எதுவுமில்லை.

அது பலாலியை நோக்கி
தாழப்பறந்து
பார்வையிலிருந்து மறைகிறது,

பலாலிப் படைத்தள எல்லையில்
தீப்பிழம்பும்,
கரிய திரள்புகையும் மேலெழும்புகிறது.

அடித்து
வீழ்த்தப்பட்டது உண்மையாகிறது.

விமானத்தில் ஏற்பட்ட
கோளாறு என்றது சிறிலங்கா
படைத்தரப்புச் செய்தி..

அவசரமா?
நிதானமா?

வெற்றிச் செய்தி வெளிப்படுத்தவும்,
கேட்கவும்,
அவசரப் படுத்துகிறது எமது பக்கத்தில் சில தரப்பு…

பரபரப்புச் செய்திகளை விட்டு ஊடகங்களைத் திருப்திபப்டுத்துவதல்ல முக்கியம்,

எதிரியின் பலவீனத்தைக் கண்டறிந்து
அதனூடாக
எமது மக்களுக்கு எம்மீதும்,
போராட்டத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில்தான்
தலைவரின் கவனம் இருந்தது.

அண்ணை
நிதானமாகத் தன்பணியில் ஈடுபடுகிறார்.

ஒரேதிசை நோக்கி
எல்லோரும் ஓடுவதால்
நாமும் ஓடுவதா?

நமக்கான இலக்கு
இருக்கும் திசைநோக்கி
எதிர்நீச்சல் போடுவதா?

இங்கு தான் முடிவெடுக்கும் ஆற்றல்
மையம் கொள்கிறது,
நிதானம் கைகொடுக்கிறது..

என்னதான் நடக்கிறது?

எதிரிக்கு தன்பலவீனம்
புரியவில்லை,
விபத்து என்றே முடிவுசெய்கிறான்.

பிறகென்ன?

மறுநாள் காலையில்
விபத்தினை விசாரிக்க
ஒரு உயர்குழு ,
பொய் சொல்வதற்காக
வந்த அப்பாவி சிங்கள பத்திரிகை நிருபர்கள் சகிதம்,

கொழும்பிலிருந்து
இன்னுமொரு விமானத்தில்
அதே வான்பரப்பில்
பலாலி நோக்கி..

இதுதான் நடக்கும்
இப்படித்தான் முடியும்
என்பதை கணித்து ,
கியுபா – fபிடல் காஸ்ரோ பாணியில் மிக நிதானமாக வாசித்துக்கொண்டிருக்கிறார் நம்தலைவர்.

வேறென்ன?

மீண்டும் அதேபோன்ற முரட்டு அடி, இப்போதுதான்
எதிரிக்கே புரிந்தது.

நிலாவரைப் பகுதியில்
வீழ்ந்து நெருங்கியது.

அடுத்தடுத்து இரண்டு
சிங்கள விமானப்படை
விமானங்கள் விபத்தில்
அல்ல
புலிகளின் வான்காப்பு பிரிவினரால்
சுட்டு வீழ்தப்பட்டதாக
புலிகளின் குரல்
செய்தியை கேட்க மக்கள்கூடினர்,

ஈழநாதம் சிறப்பு செய்தித் தாளுக்கு
மக்கள் அலைமோதினர்.

இங்கு நிதானத்தைக் கற்றுத்தருகிறார்
எம் தலைவர். பொறுமையும், நிதானமும் இன்னொரு எதிரியின் இலக்கை எம் கண்முன்னே கொண்டு வந்து கைகளிலே தருகிறது. ஒரு விடுதலைப் போரிலே பொறுமையும், நிதானமும் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பல தடவைகள் தேசியத்தலைவர் சொல்லித்தந்தார் தருகிறார்…..

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply