பரீட்சை முடிவில் வடக்கு கடைசியிடம் பெற்றோரை குற்றம்சாட்டும் பேராசிரியர்!

You are currently viewing பரீட்சை முடிவில் வடக்கு கடைசியிடம்    பெற்றோரை குற்றம்சாட்டும் பேராசிரியர்!

வடக்கு மாகாணத்தில் பரிட்சை பெறுபேற்றினை அதிகரிக்க வேண்டுமேயானால் வடக்கு மாகாண கல்வித் திணைக்களமானது பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையினை ஏற்படுத்துவதன் மூலமே வடக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியர் பொ பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் வெளியாகிய க பொ த சாதாரணதர பரீட்சை பெறுபேற்றின்படி வடக்கு மாகாணமானது கடைசி மாகாணமாக திகழ்கின்றது. இந்த விடயம் மாற்றப்பட வேண்டுமேயானால் வடக்கில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்துவதன் மூலமே சாத்தியப்படும். ஏனெனில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் மிகச்சிறப்பாக காணப்படுகின்றன.

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தில் 13 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் காணப்படுகின்றது. அதே போல் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களினால் அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே யாகும். இதேபோல் இலங்கையின் 99 வது கடைசி வலயமாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தீவக வலயம் காணப்படுகின்றது.

அத்தோடு இலங்கையின் 16ஆவது வலயமாக மன்னார் வலயம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையை மாற்றியமைக்க வேண்டுமேயானால் மாகாண கல்வித் திணைக்களமானது பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பான கரிசனை ஏற்படுத்துவதன் மூலமே பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.

பரீட்சை முடிவில் வடக்கு கடைசியிடம் பெற்றோரை குற்றம்சாட்டும் பேராசிரியர்! 1
பகிர்ந்துகொள்ள