வடமராட்சியின் பருத்தித்துறை நகர் பகுதியில் மேலும் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பருத்தித்துறையைச் சேர்ந்த 22 பேருக்கு யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட 07 பேரும் பருத்தித்துறை நகர் பகுதியில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்களென்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இன்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆகவும்,
கடந்த சில நாட்களில்அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
பருத்தித்துறை நகரப் பகுதி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதிகளில் நேற்று 35 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.