பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போரட்டம்!

You are currently viewing பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போரட்டம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து  மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திந்தனர்.

இதனால் பிரதேச செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தன.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போரட்டம்! 1

அத்தோடு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியையும் மறித்து வீதியில் இந்திய மீனவர்களால் அறுத்து நாசமாக்கப்பட்ட வலைகளையும் வீதியில் போட்டு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போரட்டம்! 2

இதனால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததோடு பாடசாலை மாணவர்கள் மாத்திரம் வீதியினால் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போரட்டம்! 3

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் சிறீலங்கா காவல்த்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கடலில் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டது.இனியும் நாம் பொறுத்திருக்க மாட்டோம். ஆகவே தான் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில், மக்கள் போராட்டமாக இதை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது 13 மீனவ சங்கங்கள் இணைந்துள்ளன. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பல வாக்குறுதிகளை எமக்கு தந்து ஏமாற்றியுள்ளனர்.

ஆகவே, நாம் இனி அவர்களின் கதைகளை நம்ப போவதில்லை. முதலில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும்.

நாம் இனியாரையும் சென்று சந்திக்க மாட்டோம். கடற்படை தளபதியோ அல்லது, அமைச்சரோ இங்கு வந்து எழுத்து மூலமாக எமக்கு வாக்குறுதி தர வேண்டும். இனிமேலும் இந்திய இழுவை படகால் எமக்கு அநீதி இழைக்க கூடாது.

இந்திய தமிழ் சொந்தங்களுடன் எமக்கு கோபம் இல்லை. முரண்பாடு இல்லை. எமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்து, எங்கள் கடல் வளங்களையும், எமது உடமைகளையும் அழிக்க வேண்டாம் என்று தான் நாம் கூறுகின்றோம்.

ஆகவே இந்திய ஊடகங்கள் செய்திகளை தெளிவாக உண்மையாக வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஆளுநர் கூட அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். நாம் ஆளுநர் அலுவலகத்தில் சென்று அவரை சந்திக்க மாட்டோம். யார் என்றாலும் இங்கு வந்து தீர்வை எழுத்து மூலம் தரவேண்டும் என்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments