பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் காவல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோரோ பகுதியில் பயங்கரவாதிகள் சாலையில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இந்த தாக்குதலில் அந்த வழியாக பேருந்தில் சென்ற குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.