பலத்த காற்று காரணமாக 6,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்!

  • Post author:
You are currently viewing பலத்த காற்று காரணமாக 6,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்!

சனிக்கிழமை காலை எல்வியாவின்(Elvia) வாடிக்கையாளர்களில் சுமார் 6,000 பேர் ஒஸ்லோ மற்றும் விக்கென் பகுதியில் (Oslo og Viken) மின்சாரத்தை இழந்துள்ளனர்.

காலையில் புயலுடன் கூடிய பலத்த காற்று வீசியுள்ளது, இதனால் விநியோக பகுதி முழுவதிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது என எல்வியாவின் தகவல் தொடர்பு மேலாளர் மோர்டன் ஷாவ் (Morten Schau) கூறியுள்ளார்.

அது தவிர ஹால்டன் (Halden) மற்றும் ஆஸ்ட்ஃபோல்ட் (indre Østfold) போன்ற பிற இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

எல்வியா(Elvia) 6229 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, ஆகவே மிக விரைவில் மின்சாரத்தை திரும்பப் பெற நாங்கள் முழுநேர வேலை செய்கின்றோம் என மோர்டன் ஷாவ் (Morten Schau) கூறியுள்ளார்.

ஆதாரம்:- NRK

பகிர்ந்துகொள்ள