பலெர்மோ மாநகர முதல்வர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கும் இடையிலான உடன்படிக்கை!!

You are currently viewing பலெர்மோ மாநகர முதல்வர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கும் இடையிலான உடன்படிக்கை!!

இத்தாலி பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில், பலெர்மோ மாநகர முதல்வர் Prof. Roberto LaGalla . அவர்களுடனான சந்திப்பு 28/12/2024 சனிக்கிழமை Palazzo Palagonia ல் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பலெர்மோ மாநகர முதல்வர் Prof. Roberto LaGalla, துணை மாநகர முதல்வர் Giuseppe Mancuso அவர்களும், மற்றும் இத்தாலியப் பிரமுகர்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர்கள், தமிழர் கத்தோலிக்க ஆன்மீக ஒன்றிய அருட்தந்தை பீற்றர் இராஜநாயகம் அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பினர், இத்தாலியப் பிரமுகர்கள், மற்றும் தமிழ் மக்கள் பிரதிநிதி திருமதி. றமணி தியாகராஜா, திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின்போது இன அழிப்பு உடன்படிக்கை தொடர்பான விடயம்

மற்றும் பலெர்மோ வாழ் தமிழ் இளையோர்களின் எதிர்கால விடயங்கள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு. பலெர்மோ மாநகர முதல்வர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கும் இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply