பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

You are currently viewing பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்! 1

அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் இன்று  இரவு இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தர்.

இதன் போது தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரி  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர்   வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply