யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்களால் இடித்தழிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இதனையே இடித்து அழித்துள்ளனர் இதனை அறிந்த சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகத்திற்குள்ளே சென்றபோது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுத்தூபியை அழிக்க முற்பட்டபோது தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு வந்த பல்கலைக்கழக ஊழியர்கள் சட்டத்தரணி சுகாஸ் அவர்களுடன் வாக்குவாதப்பட்டதுடன் கற்களை ஏற்றிச் செல்ல முற்பட்டனர் ஆனால் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் தன்னையும் சேர்த்து ஏற்றுமாறு கற்குவியலுக்குள் இருந்ததனால் மிகுதிக்கற்கள் ஏற்றப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வளாகத்திற்குள் நிற்கின்றார்கள் இதனால் பதட்டம் நிலவுகின்றது.
இராணுவமும் காவல்த்துறையும் குவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துணைவேந்தரை தொடர்புகொள்ள முற்பட்ட போதும் அவரது கைத்தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது.