கிளிநொச்சி – பளை தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம்(17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பளை சிறீலங்கா காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்