பாகிஸ்தானில் (pakistan)வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை ஆணையம், 2024 ஆம் ஆண்டில் காணாமல் போனவர்கள் தொடர்பான 379 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆணையம், கடந்த ஆண்டு இதுபோன்ற 427 காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ளதாக பாகிஸ்தான் டுடே தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், நாட்டின் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையம் 10,467 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும், அவற்றில் 8,216 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணைகள் மூலம் காணாமல் போன 6,599 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,617 முறைப்பாடுகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,251 முறைப்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.