பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய சட்டமன்ற வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். பிப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரெஹான் ஜெப் கான் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருந்தார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பழங்குடியினர் மாவட்டத்தில் மர்ம நபர்களால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அத்துடன் அவரது உதவியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ரெஹான் ஜெப் கான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடன் தொடர்புடைய வேட்பாளர். இரண்டாவது வேட்பாளராக ரெஹான் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எல்லைப் பகுதியின் இருபுறத்திலும் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.