பாகிஸ்தானில் கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது!

  • Post author:
You are currently viewing பாகிஸ்தானில் கொரோனா ;  பாதிப்பு எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 573 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 38,278 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,202 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 18,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 23,507 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 20,654 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 8,080 பேரும், பலூசிஸ்தானில் 3,468 பேரும், இஸ்லாமாபாத்தில் 1,728 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 211 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள