பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில்,90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள நுஷ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே, 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. சமீபத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர்.
அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் நடந்து பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.